முல்லைத்தீவு பேருந்துச் சேவையில் சர்ச்சை: சாரதி, நடத்துநருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை!

#SriLanka #Bus #District #Mullaitivu #LANKA4 #Driver #Association
Abi
5 hours ago
முல்லைத்தீவு பேருந்துச் சேவையில் சர்ச்சை: சாரதி, நடத்துநருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை!

முல்லைத்தீவு – கொக்கிளாய் பேருந்துச் சேவையின்போது பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் ஐந்து நாட்களுக்கு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, மதுபோதையில் பேருந்தில் ஏறிய சிலரால் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இச்சம்பவத்தில் பேருந்தின் உரிமையாளர், சாரதி மற்றும் நடத்துநர் தமது கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றத் தவறியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் சட்ட ஏற்பாடுகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ. விமலேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பேருந்துச் சேவைகளின்போது பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பில் உரிய ஆதாரங்களுடன் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!