யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு நவம்பர் 12ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

#SriLanka #Colombo #LANKA4 #Case #Court #YoshithaRajapaksa
Abi
6 hours ago
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு நவம்பர் 12ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை நவம்பர் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதீஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் அமைந்துள்ள ஐந்து காணிகளை 730 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டு கொள்வனவு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் குற்றஞ்சாட்டி, சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!