மீபே தொழிற்சாலையில் வெடிப்பு: மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!

#SriLanka #Police #Hospital #LANKA4 #Factory #Injury #Explosion
Abi
4 hours ago
மீபே தொழிற்சாலையில் வெடிப்பு: மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!

மீபே – இங்கிரிய வீதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

தொழிற்சாலைக்குள் இருந்த டீசல் பீப்பாய் ஒன்றை இரும்பு ஒட்டும் கருவி மூலம் பழுதுபார்க்க முயன்றபோது, அது திடீரென வெடித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மூவரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!