அரசியலில் ஜென் Z தலைமுறையினரின் பங்களிப்பு அவசியம் - ரணில் வலியுறுத்தல்!

#SriLanka #Ranil wickremesinghe #LANKA4 #Politician #Politics
Thamilini
4 hours ago
அரசியலில் ஜென் Z  தலைமுறையினரின் பங்களிப்பு அவசியம் - ரணில் வலியுறுத்தல்!

தற்போதைய கட்சி அரசியலில், பாரம்பரிய வழிமுறைகள் மூலம் இனி முன்னேறிச் செல்ல இயலாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகிறார். 

 சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியும், இணைந்து செயல்படுவதன் மூலம் அரசியல் வெற்றியை அடைய முடியும் என சில கட்சிகள் எதிர்பார்த்தாலும், பாரம்பரிய அரசியல் வழிமுறைகள் மூலம் மட்டுமே அத்தகைய வெற்றியை அடைய முடியாது என்று குறிப்பிட்டார்.

 அரசியல் வெற்றிகளை நோக்கி முன்னேறுவதற்கு புதிய தலைமுறையினரின் பங்களிப்பு இன்றியமையாதது என்று சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, இதற்காக ஜென் Z மற்றும் மில்லெனியல் இளைஞர் தலைமுறையினரையும் உள்ளடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 அதன்படி, பாரம்பரிய அரசியல் வழிமுறைகளிலிருந்து முழுமையாக விலகி ஒரு மறுசீரமைப்பின் மூலமே எதிர்கால அரசியல் வெற்றிகளை அடைய முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!