இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் விடுதலை!

#India #SriLanka #Jaffna #CourtOrder #LANKA4 #Case
Thamilini
2 hours ago
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்  விடுதலை!

இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தப்பின்  நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டபின் பண்டார்நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 12, 2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய், மசியப்பிட்டியைச் சேர்ந்த 50 வயதான குறித்த நபர், விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 2015 ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்திய நீதிமன்றமொன்றில் இடம்பெற்ற விசாரணையின் முடிவில், அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

தனது சிறைத்தண்டனையை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!