நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Rain #LANKA4 #Department of Meteorology
Thamilini
5 hours ago
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னறிவிப்பு!

இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில், இன்று (31) பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, 

குறித்த அறிக்கையில்,  குருநாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!