தியானம் செய்யத் தொடங்குபவர்களுக்கான 04 குறிப்புக்கள்

#SriLanka #meditation #LANKA4
Thamilini
6 hours ago
தியானம் செய்யத் தொடங்குபவர்களுக்கான 04 குறிப்புக்கள்

தியானம் செய்யத் தொடங்குபவர்களுக்கான 04 குறிப்புக்கள்

 01 உங்கள் வசதிக்கேற்ப நேரத்தை முதலில் தேர்ந்தெடுக்குங்கள்

 தியானம் என்பது தளர்வான நிலையில் செய்யவேண்டிய ஒன்று. 

தியானத்தை சரியாக செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், உங்கள் வசதிக்கேற்ப நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். 

உங்களுக்கு தொந்தரவுகள் இல்லாத, சுதந்திரமாக ஓய்வெடுத்து தியானத்தை அனுபவிக்கக்கூடிய நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

 சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரங்கள் தியானத்திற்கு மிகவும் ஏற்றவை. இந்த நேரங்களில் வீட்டில் அமைதி நிலவும். இது நீங்கள் எளிதாக தியானம் செய்வதற்கு உதவும்.

01. உங்கள் வசதிப்படி அமைதியான இடத்தை தேர்ந்தெடுக்குங்கள் 

அமைதியான நேரத்தைத் தேர்வு செய்வது போல அமைதியான இடத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். 

 தொல்லைகள் ஏதும் இல்லாமல் அமர்ந்து தியானம் செய்ய அமைதியான சூழ்நிலை வேண்டும். அது உங்கள் வீட்டின் அறையாகவும் இருக்கலாம். இயற்கையான எழிலுடன் கூடிய இடமாகவும் இருக்கலாம். 

தியான மையமாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட இடங்களைத் தேர்வு செய்யும் போது தியானம் செய்யும் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு தியானம் அனுபவிக்கக் கூடியதாகவும் ஓய்வளிப்பதாகவும் இருக்கும். 

03. வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள் 

நீங்கள் அமரும் விதம் மிகவும் முக்கியமானது எவ்வாறு அமர்ந்து தியானம் செய்வது உங்களுக்கு ஏற்றதாக உள்ளது என்பதைக் கண்டறியுங்கள். 

 நீங்கள் ஒரு நாற்காலியில் அமரலாம். தரையில் ஒரு குஷனில் அமரலாம். முதலில் உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். 

 கைகளை மடியின் மீது தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். தளர்வாக இருக்கும் அதே நேரத்தில் நிலையாகவும் அமர வேண்டும். உங்கள் முதுகெலும்பை நிமிர்த்தி உங்கள் தோள்கள் மற்றும் கழுத்துப் பகுதிகளைத் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். 

 இந்த செயல்முறை முழுவதும் உங்கள் கண்கள் கண்டிப்பாக மூடியே இருக்க வேண்டும். 

04.  ஓரளவு காலியான வயிற்றுடன் தியானம் செய்வது நல்லது 

வீட்டிலோ வெளியிலோ தியானம் செய்வதாக இருந்தால் காலியான வயிற்றில் தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். 

உணவு உண்பதற்கு முன் தியானம் செய்வதற்கான காரணம் என்னவென்றால், சாப்பிட்டவுடன் தியானம் செய்தால் நாம் தூங்கி விடுவோம். 

சில நேரங்களில் வயிறு நிறைந்திருக்கும் போது தியானம் செய்வது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் பசியெடுக்கும் போது தியானம் செய்தால், உங்கள் கவனம் திசை திரும்பலாம்.

பசியாக இருக்கும்போது நீங்கள் உணவு பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பீர்கள். எனவே உணவு உண்ட பிறகு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு நீங்கள் தியானம் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. 

 பசியாக இருக்கும் போது தியானம் செய்ய நீங்கள் உங்களைக் கட்டாயப்படுத்திக் கொள்ளாதீர்கள். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!