ஏறாவூரில் 'அத்தம' வேலைத்திட்டம் முன்னெடுப்பு – பொதுமக்கள் இணைந்து சிரமதானப் பணிகளில் பங்கேற்பு!

#SriLanka #government #LANKA4 #Public #Divisional Secretariat #NPP #community
Abi
5 hours ago
ஏறாவூரில் 'அத்தம' வேலைத்திட்டம் முன்னெடுப்பு – பொதுமக்கள் இணைந்து சிரமதானப் பணிகளில் பங்கேற்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 'அத்தம' வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு – ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் – 2ஏ கிராம சேவகர் பிரிவின் பல்வேறு பகுதிகளில் இன்று (31.10.2026) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பிரஜாசக்தி அமைப்பின் பிரதேசத் தலைவர் சபீர் சலாம் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதானப் பணிகளில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். பாஸ்கர், கிராம சேவை அலுவலர் எம்.எம்.ஏ. ஷாபி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான யு. பைறூஸ், யு.எல்.ஏ. மஜீத், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உப தலைவர் எம்.ஜி.ஏ. நாஸர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.

பிரதேசத்தின் தூய்மையையும் சுகாதாரச் சூழலையும் மேம்படுத்தும் நோக்கில் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!