குளிர்கால சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு இலங்கைக்கு மீண்டும் களமிறங்கும் 3 சர்வதேச விமான சேவைகள்!

#SriLanka #Tourist #International #Russia #LANKA4 #European #Airlines
Abi
4 hours ago
குளிர்கால சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு இலங்கைக்கு மீண்டும் களமிறங்கும் 3 சர்வதேச விமான சேவைகள்!

எதிர்வரும் குளிர்கால சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு, மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கைக்கான தமது விமானப் பயணங்களை மீள ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குளிர்கால விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குப் பெருமளவில் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த விமான சேவைகளின் மீள ஆரம்பம் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, ரஷ்யாவைத் தளமாகக் கொண்ட Azur விமான நிறுவனம், மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கான தனது விமானப் பயணங்களை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கவுள்ளது.

அதேவேளை, பிரான்ஸைச் சேர்ந்த France Bee விமான நிறுவனம், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதேபோன்று, ரஷ்யாவில் இயங்கும் S7 விமான நிறுவனமும் சேர்பியாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று சர்வதேச விமான நிறுவனங்களின் இந்த நடவடிக்கைகள் இலங்கைக்கான சர்வதேச விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதுடன், எதிர்வரும் குளிர்கால சுற்றுலாப் பருவத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!