கால்நடை மருத்துவர்களின் பங்களிப்பு மனித நல்வாழ்வுக்கும் அவசியமானது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

#SriLanka #PrimeMinister #Health #LANKA4 #environment #Animal #Harini Amarasooriya
Abi
3 hours ago
கால்நடை மருத்துவர்களின் பங்களிப்பு மனித நல்வாழ்வுக்கும் அவசியமானது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

விலங்குகளின் சுகாதாரத்தையும் மனித நல்வாழ்வையும் பாதுகாப்பதில் கால்நடை மருத்துவத் தொழில்வல்லுநர்கள் ஆற்றும் பணி மிகவும் முக்கியமானது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்களின் பங்களிப்பு பொதுச் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலின் நிலைபேறான தன்மை ஆகியவற்றிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2026 ஒக்டோபர் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கை கால்நடை மருத்துவச் சங்கத்தின் (SLVA) 78ஆவது வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டம் மற்றும் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம், கால்நடை மருத்துவர்களின் தொழில்சார் பொறுப்புகள் மற்றும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான சுகாதாரத் தொடர்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும் பாதுகாப்பான உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதிலும் கால்நடை மருத்துவத் துறையின் பங்களிப்பு முக்கியமானது எனவும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கை கால்நடை மருத்துவச் சங்கத்தின் 78ஆவது வருடாந்த மாநாடு, கால்நடை மருத்துவத் துறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலச் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான முக்கிய நிகழ்வாக அமைந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!