இன்று அதிரடியாக வெளியாகவுள்ள சூர்யாவின் "சீன்" திரைப்படத்தின் டிரெய்லர்

#Actor #TamilCinema #LANKA4 #trailer #surya #Movie #L4
Prasu
3 hours ago
இன்று அதிரடியாக வெளியாகவுள்ள சூர்யாவின் "சீன்" திரைப்படத்தின் டிரெய்லர்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சீன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். 

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். 

வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று இரவு 07.30 மணியளவில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!