இலங்கை தமிழர்களுக்கு பாடம் படிப்பித்த இஸ்ரேலிய வாக்காளர்கள் - மனோ கணேசன்
இஸ்ரேலில் வாழும் அரபு சிறுபான்மை மக்கள் தேர்தலில் தங்களது வாக்குகளைப் பயன்படுத்திய விதம், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் ரீதியான ஒரு பாடமாக அமைந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அரபு தலைமையில் செயற்படும் இரண்டு அரசியல் கூட்டணிகளும் இணைந்து 19 ஆசனங்களைப் பெற்றுள்ளதாகவும் இதன் மூலம் அரசியல் ரீதியாக பேரம் பேசக்கூடிய வலுவான தரப்பாக அவை உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் ஜனாதிபதி ஆட்சி முறை இல்லாத நிலையில், நாடாளுமன்றத்தின் ஊடாக பிரதமரும் அமைச்சரவையும் தெரிவு செய்யப்படுவதால் நாடாளுமன்ற ஆசனங்களின் முக்கியத்துவம் அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் அரசியல் அலையின் தாக்கத்தில் வாக்களித்ததாக மனோ கணேசன் விமர்சித்துள்ளார்.