36,710 கஞ்சா செடிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது
#SriLanka
#ARREST
#Police
#Investigation
#LANKA4
Abi
2 hours ago
மொனராகலை காவல்துறை போதைப்பொருள் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, ஹம்பேகமுவ – மவிஆர பிரதேசத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 36,710 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 6 முதல் 8 அடி உயரம் வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகள் அனைத்தும் சம்பவ இடத்திலேயே வேருடன் பிடுங்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பேகமுவ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.