2,819 புதிய தாதிய உத்தியோகத்தர்களுக்கு நியமனம் – 76 பேருக்கு விசேட தர பதவி உயர்வு!

#SriLanka #LANKA4 #President #AnuraKumaraDissanayake #promotion
Abi
2 hours ago
2,819 புதிய தாதிய உத்தியோகத்தர்களுக்கு நியமனம் – 76 பேருக்கு விசேட தர பதவி உயர்வு!

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் தாதியர் கல்லூரிகளில் மூன்று வருட உயர் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த 2020ஆம் ஆண்டு மாணவர் தாதியர் குழாத்தைச் சேர்ந்த 2,819 பயிலுனர்கள் மூன்றாம் தர தாதிய உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (01) காலை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது, வைத்தியசாலை சேவையில் பணியாற்றும் முதலாம் தர தாதிய உத்தியோகத்தர்கள் 76 பேருக்கு விசேட தர தாதி உத்தியோகத்தர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன.

நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் சுகாதார சேவைகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, சுகாதாரத் துறைக்குத் தேவையான மனிதவளத்தைப் பூர்த்தி செய்வதுடன், தாதியர் சேவையில் நிலவும் வெற்றிடங்களைக் குறைக்கும் நோக்கிலும் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இலவச சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தி, மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்த நியமனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக தாதியர் சேவையில் இணைந்துள்ள 2,819 உத்தியோகத்தர்களுக்கும், பதவி உயர்வு பெற்ற 76 தாதிய உத்தியோகத்தர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!