தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு – கைதி ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Prison #LANKA4 #GunShoot #Killed
Abi
1 hour ago
தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு – கைதி ஒருவர் உயிரிழப்பு!

பல்லேகல தும்பர சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தபோது, சிறை அதிகாரி ஒருவரால் குறித்த கைதி சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சேனக பல்லெதென்ன, குறித்த கைதி சிறைச்சுவருக்கு அருகிலுள்ள பாதுகாப்புக் கோபுரத்தின் மீது ஏறி, பணியில் இருந்த அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கைதி தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் குறித்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த கைதி தும்பர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!