வீதி விபத்துகளால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு– நாடாளுமன்றில் தகவல்!
#SriLanka
#Death
#Parliament
#Accident
#Hospital
#LANKA4
#Public
Abi
1 hour ago
2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான ஐந்து வருட காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளால் ஆண்டுதோறும் சராசரியாக 2,536 பேர் உயிரிழந்துள்ளதாகப் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி இன்று (03) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதே காலப்பகுதியில் வீதி விபத்துகள் காரணமாக ஆண்டுதோறும் சராசரியாக 32,483 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வீதி விபத்துகளில் காயமடைந்தவர்களின் மருத்துவ மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக நாட்டின் வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3 முதல் 5 சதவீதம் வரையான தொகை செலவிடப்படுவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.