நுவரெலியாவில் சோக சம்பவம் – விஷ வாயுவைச் சுவாசித்த தம்பதியினர் உயிரிழப்பு!

#SriLanka #Death #Police #Investigation #NuwaraEliya #LANKA4
Abi
1 day ago
நுவரெலியாவில் சோக சம்பவம் – விஷ வாயுவைச் சுவாசித்த தம்பதியினர் உயிரிழப்பு!

நுவரெலியா, மீப்பிலிமான பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர் விஷ வாயுவைச் சுவாசித்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஆண் ஒருவரும், 46 வயதுடைய அவரது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் மீப்பிலிமான பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுற்றுலா விடுதியொன்றின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பணிகள் நிறைவடையும் வரை அருகிலுள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர்.

நுவரெலியா பகுதியில் நிலவும் கடும் குளிர் காரணமாக, பார்பிக்யூ அடுப்பில் தீ மூட்டி அதனை அறைக்குள் வைத்துவிட்டு இருவரும் உறங்கச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று அதிகாலை உறவினர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் இருவரும் பதிலளிக்காததால், கிராம அலுவலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கிராம அலுவலர், இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

உயிரிழந்த ஆண் கப்பல் ஒன்றின் தலைவராகப் பணியாற்றி வந்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நானுஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!