இந்திய நிலப்பரப்பை அடைந்தது 'முரசு' சூறாவளி – கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 'முரசு' சூறாவளி இந்திய நிலப்பரப்பை அடைந்துள்ளதுடன், தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (03) முற்பகல் 11.30 மணியளவில் சுழல்காற்றாகக் காணப்படும் இந்தப் புயல், நள்ளிரவு 11.30 மணியளவில் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 65 முதல் 75 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனால் குறித்த கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் கடலுக்குச் செல்லும்போதும் கடலில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போதும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.