மோட்டார் வாகனத் திணைக்களத்தில் அதிரடி சோதனை!

#SriLanka #Police #Investigation #government #LANKA4 #Public #Bike #Traffic
Lakhi
3 hours ago
மோட்டார் வாகனத் திணைக்களத்தில் அதிரடி சோதனை!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுமார் 90 இலட்சம் வாகனங்கள் தொடர்பான தரவுத் தகவல்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, கடந்த 29ஆம் திகதி இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வலான ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்த இந்த நடவடிக்கையில், இலங்கை கணினி அவசர தயார்நிலைப் பதிலளிப்புக் குழு, தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணினித் துறை நிபுணர்களும் பங்கேற்றுள்ளனர்.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் நீண்டகாலமாக இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட வாகனங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அண்மையில் பொலிஸார் சில சந்தேகநபர்களைக் கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!