கனடா மக்களுக்கு பொது பாதுகாப்பு அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

#CANADA #people #water #LANKA4 #Warning #L4 #Electricity
Prasu
2 hours ago
கனடா மக்களுக்கு பொது பாதுகாப்பு அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாத நிலை ஏற்படும் பட்சத்தில், மூன்று நாட்களுக்காவது அதை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கனடா பொது பாதுகாப்பு அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.

பல நாடுகள், நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொள்ளத் தயாராகுமாறு தங்கள் குடிமக்களை அறிவுறுத்திவரும் நிலையில், கனடாவும் அத்தகைய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது.

மக்களை அச்சுறுத்தும் வகையில் இல்லாமல், ’அவசர காலங்களில், குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்குத் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ளத் தயாராக இருக்குமாறு கனேடியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், 72 மணிநேரம் என்பது குறைந்தபட்ச பரிந்துரை என்று கூறியுள்ள கனடா பொது பாதுகாப்புத் துறை, சில பகுதிகளில் அடிப்படை சேவைகளை மீட்டெடுக்கவோ அல்லது அவசரகாலப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் சென்றடையவோ அதிக நேரம் ஆகக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!