சிறப்புரிமைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்!

#SriLanka #Parliament #LANKA4 #Public
Abi
1 hour ago
சிறப்புரிமைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்!

பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகளுடன் தொடர்புடைய அவசரப் பிரேரணைகளுக்கு ஏனைய பிரேரணைகளை விட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்புரிமை மீறல்கள் என்பது தனிப்பட்ட நலன்கள் சார்ந்த விடயமல்ல, அவை பொதுமக்களின் பிரச்சினைகளுடன் தொடர்புடையவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 29(i), 29(ii) ஆகியவற்றை மேற்கோள்காட்டி, தனது சிறப்புரிமைப் பிரச்சினையைச் சபையில் முன்வைக்க ஒரு நிமிடம் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் நடைமுறைகளும் நிலையியற் கட்டளைகளும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!