ரூ.8.4 மில்லியன் இலஞ்சக் குற்றச்சாட்டு: சாமர சம்பத் உள்ளிட்ட இருவர் நீதிமன்றில் ஆஜர்!
#SriLanka
#Parliament
#LANKA4
#Court
#Allegation
Abi
13 hours ago
இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (06) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
8.4 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் ஆகிய இருவருமே இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இருவரையும், கடந்த 23ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, இருவரும் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.