புதிய சட்டங்கள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை – பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க!

#SriLanka #government #Minister #LANKA4 #national
Abi
2 hours ago
புதிய சட்டங்கள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை – பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க!

அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அன்றி, மக்களை அடக்குவதற்காக அல்ல என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வித தவறும் செய்யாத பொதுமக்கள் புதிய சட்டமூலங்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில எதிர்க்கட்சிகள் புதிய சட்டமூலங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டில் உண்மையிலேயே மக்கள் மத்தியில் அச்சம் நிலவியிருந்தால் அவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடியிருப்பார்கள் என்றும், தற்போது அரசியல் தலைவர்கள் மாத்திரமே அச்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான புதிய பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் சட்டத்திற்கு மேலாகச் செயற்பட்ட பலரும் இன்று நீதிமன்றங்களுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் (CID) செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!