இஸ்ரேல் அரசியலில் அதிரடி திருப்பம்: நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வருகிறதா?

#PrimeMinister #Election #world_news #Israel #LANKA4 #Netanyahu #Politics
Abi
11 hours ago
இஸ்ரேல் அரசியலில் அதிரடி திருப்பம்: நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வருகிறதா?

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள அரசியல் இழுபறிக்கு மத்தியில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு அரபுக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இஸ்ரேலின் அடுத்த அரசாங்கம் தொடர்பான அரசியல் நகர்வுகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.

இஸ்ரேல் நாடாளுமன்றமான 'நெசட்'டில் மொத்தம் 120 ஆசனங்கள் உள்ளன. ஆட்சியமைப்பதற்கு குறைந்தபட்சம் 61 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.

தேர்தல் முடிவுகளின்படி நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கு 53 ஆசனங்களும், ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 48 ஆசனங்களும் கிடைத்துள்ளன. 

அரபுக் கட்சிகள் மொத்தம் 19 ஆசனங்களைப் பெற்றுள்ளன. இந்நிலையில், ஐக்கிய தோரா யூதக் கட்சி (UTJ) நெதன்யாகுவை ஆதரிக்க மறுத்துள்ளதுடன், 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐசென்கோட்டை ஆதரிப்பதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும், இது இறுதியான ஆட்சிக் கூட்டணி அமைந்துவிட்டதாகப் பொருளல்ல. இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய அரசாங்கத்தை அமைக்க ஒருவரை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 

இதனால் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!