செம்மணி புதைகுழி விவகாரம்: இடைக்கால அறிக்கைக்கு எதிராக நவம்பர் 16ஆம் திகதி போராட்டம்!

#SriLanka #Jaffna #Protest #LANKA4 #Chemmani Mass Grave
Abi
1 hour ago
செம்மணி புதைகுழி விவகாரம்: இடைக்கால அறிக்கைக்கு எதிராக நவம்பர் 16ஆம் திகதி போராட்டம்!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு நீதி கோரி நீண்டகாலமாகப் போராடி வரும் குடும்பங்கள், யாழ்ப்பாண மாவட்டத்திற்கான புதிய நிர்வாகக் குழுவைத் தெரிவு செய்துள்ளதுடன், செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான இடைக்கால அறிக்கைக்கு எதிராகப் போராட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளன.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்படி, சிவபாதம் இளங்கோதை தலைவராகவும், கஜேந்திரகுமார் செயலாளராகவும், சத்தியா விஜயபாமா பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். விக்னேஸ்வரி துணைத் தலைவராகவும், சுதா துணைச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, செம்மணி புதைகுழி தொடர்பாக தொல்லியல் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையைத் தாம் முழுமையாக நிராகரிப்பதாக சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு செம்மணி பகுதியில் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 7ஆம் திகதி நல்லூரில் நடைபெறவுள்ளது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழி விவகாரத்தில் உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமது நீண்டகாலக் கோரிக்கை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!