தனுஷின் ‘ஓம்’ இசை வெளியீட்டு விழா இன்று – 8,000 பேருக்கு மட்டுமே அனுமதி!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியொன்றில் நடைபெறவுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காவல்துறை அனுமதி மற்றும் தீபாவளிப் பண்டிகை தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக, விழாவில் 8,000 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுக்கும், ஏனைய மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகளுக்கும் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அண்மைக்காலமாகத் தன்னைச் சுற்றி எழுந்துள்ள அரசியல் கருத்துகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்பில் நடிகர் தனுஷ் விழா மேடையில் கருத்துத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.