இலங்கை – இத்தாலி உறவுகளை மேலும் வலுப்படுத்த விசேட கலந்துரையாடல்!

#SriLanka #Meeting #government #LANKA4 #Italy
Mahathi
1 hour ago
இலங்கை – இத்தாலி உறவுகளை மேலும் வலுப்படுத்த விசேட கலந்துரையாடல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கும் இலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் டமியானோ பிரான்கோவிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு இன்று (06) நடைபெற்றுள்ளது. இதன்போது, 2025 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை – இத்தாலி அரசியல் ஆலோசனைக் கூட்டத்தின் முதலாவது சுற்றில் எட்டப்பட்ட முடிவுகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தகட்ட அரசியல் ஆலோசனைக் கூட்டத்தை 2027ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இத்தாலி அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் ஆழப்படுத்தி, பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான அர்ப்பணிப்பை இருதரப்பினரும் இதன்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!