போலந்தில் உள்ள உக்ரைன் உதவி மையத்தின் வான் பாதுகாப்பை பொறுப்பேற்கும் பிரான்ஸ்

#FRANCE #Ukraine #LANKA4 #Defense #Poland #L4
Prasu
23 minutes ago
போலந்தில் உள்ள உக்ரைன் உதவி மையத்தின் வான் பாதுகாப்பை பொறுப்பேற்கும் பிரான்ஸ்

உக்ரைனுக்கான மேற்கத்திய நாடுகளின் உதவிப் பொருட்கள் விநியோகிக்கப்படும் முக்கிய மையமாக விளங்கும் போலந்தின் ரெஷோவ் விமான நிலையத்தின் வான் பாதுகாப்புப் பொறுப்பை, நேட்டோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரான்ஸ் ஏற்கவுள்ளது.

2027 முதல் இந்தப் பாதுகாப்புப் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக போலந்துக்கான பிரான்ஸ் தூதுவர் எட்டியென் டி பொன்சின் தெரிவித்துள்ளார்.

வார்சாவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், இந்தப் பணிக்காக பிரான்ஸின் வான் பாதுகாப்பு உபகரணங்கள் முதன்முறையாகப் பயன்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பிரான்ஸின் வான் பாதுகாப்பு முறைமைகள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பேட்ரியட் ஏவுகணைத் தடுப்பு முறைமைகளுடன் இணைந்து செயற்படவுள்ளன.

இதன் மூலம் இரு நாடுகளின் பாதுகாப்பு முறைமைகளும் ஒன்றிணைந்து செயற்படும் திறனைப் பரிசோதிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும், பிரான்ஸ் முன்னெடுக்கவுள்ள இந்தப் பாதுகாப்புப் பணி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது தொடர்பில் அவர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!