தீபாவளியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நாளை மதுக்கடைகள் மூட உத்தரவு

#SriLanka #Festival #LANKA4 #liquor #shop #closed #DIwali #L4
Prasu
36 minutes ago
தீபாவளியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நாளை மதுக்கடைகள் மூட உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (08) நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, வட மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலகப் பிரிவுகள் தவிர்ந்த மதுபானசாலைகளும் நாளை மூடப்படும்.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களிலுள்ள எந்தவொரு மதுபான விற்பனை நிலையமும் நாளை தொடர்ந்தும் மதுபானம் விற்பனை செய்யும் அல்லது உரிமத்தின் நிபந்தனைகளை மீறினால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த உத்தரவுகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் 1913 என்ற அவசர தொலைபேசி எண்ணை அழைப்பதன் மூலம் தெரிவிக்குமாறு கலால் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!