ஞானசார தேரரின் ஆடை விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

#SriLanka #Gnanasara Thero #LANKA4 #Court #Permission
Abi
18 minutes ago
ஞானசார தேரரின் ஆடை விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வைத்தியர் பி.ஏ. ரத்னபாலவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை நிறைவடைந்து இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, ஞானசார தேரரை சாதாரண உடை அல்லது சிறைச்சாலை சீருடையில், கைவிலங்கிட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்துவதைத் தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலை விதிகளின் 156(2) ஆம் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வரம்புகளை மீறி, அவரைப் புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல், அவற்றை விநியோகித்தல் அல்லது அதற்கு அனுமதி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளையும் தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!