பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

#SriLanka #Trincomalee #ARREST #Buddha #LANKA4 #Court #warrant
Abi
1 day ago
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

திருகோணமலை கடற்கரையில் உரிய சட்ட அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவியமை தொடர்பான வழக்கு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய இரண்டாவது சந்தேக நபரான வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கில் பொலிஸாரால் 14 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 

மேலும், 9 சந்தேக நபர்களை நாளை (12) திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!