மதுரையில் பிரபல நகை கடையில் 500 சவரன் கொள்ளை

#India #Tamil Nadu #Robbery #LANKA4 #Jewelry #madurai #L4
Prasu
5 hours ago
மதுரையில் பிரபல நகை கடையில் 500 சவரன் கொள்ளை

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிரபல தனிஷ்க் நகை கடையில் 500 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுரை புறவழிச்சாலையில் காளவாசல் பகுதியில் நாட்டின் முன்னணி நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் நகைக் கடை அமைந்துள்ளது. 

இந்த கடையில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கடை 15 நாட்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. நகைகக்டை இன்னும் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை. கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் கடையின் ஊழியர்கள் இன்று காலை திறந்து பார்த்தபோது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் முகமுடி அணிந்த மர்ம நபர்கள் நேற்று அதிகாலை 3 மணிக்கு கடைக்குள் புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

முதல்கட்ட தகவல்படி, சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், கொள்ளையர்கள் கடையின் பிரதான வழியில் நுழையாமல் கடையின் பின் பக்கம் உள்ள மாடி வழியாக கடைக்குள் இரவு நுழைந்து கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மதிப்பு சுமார் 50 கோடி என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!