எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் 2027இல் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அமுல் – ஜனாதிபதி உறுதி!
#SriLanka
#Parliament
#President
#students
#education
#AnuraKumaraDissanayake
Abi
3 hours ago
தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை இன்று (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எத்தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தாலும், அவை அடுத்த ஆண்டு கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.