எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு? 3,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்!

#SriLanka #Laugfs gas #Country #LANKA4 #Ship #Gas
Abi
46 minutes ago
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு? 3,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்!

3,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான சமையல் எரிவாயுவை (LP Gas) ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு (LAUGFS Gas) நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, வீட்டு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைக் கட்டம் கட்டமாக மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கிய பின்னர், சிலிண்டர்களை நிரப்பி விநியோகஸ்தர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்கள் ஊடாக சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், பிரதேச ரீதியாக லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு படிப்படியாக அதிகரிக்கும் எனவும் அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!