ருவன்வெலிசாய உண்ணாவிரதப் போராட்டம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு நவம்பர் 26 வரை சிறை!

#SriLanka #ARREST #strike #LANKA4 #Monk #Court #Buddhist
Abi
30 minutes ago
ருவன்வெலிசாய உண்ணாவிரதப் போராட்டம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு நவம்பர் 26 வரை சிறை!

அனுராதபுரம் வரலாற்றுப் புகழ்பெற்ற ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் மூன்று சிவில் பிரஜைகள் என மொத்தம் ஏழு பேர் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஏழு பேரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் சிலர் தமது கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள் மற்றும் சிவில் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!