நெத்தலி, மாசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இன்று முதல் குறையும்!
#SriLanka
#prices
#Food
#Minister
#LANKA4
#President
#AnuraKumaraDissanayake
Abi
16 minutes ago
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் நுகர்வோர் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கான வரிக் குறைப்புகள்
பின்வருமாறு:
- நெத்தலி: ஒரு கிலோகிராமுக்கான வரி 100 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகக் குறைப்பு.
- மாசி (கருவாடு): ஒரு கிலோகிராமுக்கான வரி 302 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகக் குறைப்பு.
- உலர்ந்த மிளகாய்: அரைத்த மற்றும் அரைக்காத மிளகாய் மீதான வரி ஒரு கிலோகிராமுக்கு 50 ரூபாவால் குறைப்பு.
குறித்த வரித் திருத்தங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
இந்த வரிக் குறைப்பின் மூலம் நெத்தலி, மாசி மற்றும் உலர்ந்த மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.