இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது!

#SriLanka #Health #LANKA4 #environment #pollution #air
Mithra
15 hours ago
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது!

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இன்று (18) காலை 7.30 மணியளவில் வெளியிடப்பட்ட காற்றுத் தரச் சுட்டெண் (AQI) தரவுகளின்படி, யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 186 ஆகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, கிளிநொச்சியில் 170, அநுராதபுரத்தில் 165, சிலாபத்தில் 164, பத்தரமுல்லையில் 166, திருகோணமலையில் 156 மற்றும் அக்கரைப்பற்றில் 154 என காற்றுத் தரச் சுட்டெண் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், எல்ல பகுதியில் 101 ஆகவும், இரத்தினபுரியில் 96 ஆகவும் காற்றுத் தரச் சுட்டெண் பதிவாகியுள்ளது.

காற்றுத் தரச் சுட்டெண் 151 முதல் 200 வரை காணப்படுவது ஆரோக்கியமற்ற நிலையாக வகைப்படுத்தப்படுகின்றது.

இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், காற்று மாசு அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!