உக்ரைனுக்கு 45 பில்லியன் யூரோ கடன் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிவு
ஐரோப்பிய ஆணையம் உக்ரைனுக்கு 45 பில்லியன் யூரோ (49.5 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான புதிய கடனை வழங்க முன்மொழிந்துள்ளது.
ரஷ்யாவின் 2022ம் ஆண்டு படையெடுப்பிற்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த கடன் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தக் கடனை, போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரஷ்யா இழப்பீடு வழங்கிய பின்னரே உக்ரைன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஒப்புதல் தேவைப்படும் இந்தத் திட்டம், ஏற்கனவே கடந்த ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட 90 பில்லியன் யூரோ கடனுக்கு மேலதிகமாக வழங்கப்படவுள்ளது.
இந்த முந்தைய கடன், 2026 மற்றும் 2027ம் ஆண்டுகளில் உக்ரைனுக்கு நிதி வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய வான் டெர் லேயன், "இந்த ஆக்கிரமிப்புப் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஐரோப்பா ஒற்றுமையுடன் நிற்கிறது.
போர்க்காலத்திலும் அமைதிக்காலத்திலும் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் முன்பை விட உறுதியாக இருக்கிறோம்" என்று கூறினார்.