சிறைச்சாலையிலிருந்து தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ச!

#SriLanka #Mahinda Rajapaksa #Letters #Prison #Namal Rajapaksha #LANKA4 #Birthday #Former President
Mithra
15 hours ago
சிறைச்சாலையிலிருந்து தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சிறைச்சாலையிலிருந்து விசேட பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தந்தையின் பிறந்தநாளில் நேரில் இருந்து வாழ்த்துத் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து இக்கட்டான சூழலை எதிர்கொண்டாலும், தந்தை மீதான தனது அன்பும் மரியாதையும் ஒருபோதும் குறையாது எனத் தெரிவித்துள்ளார்.

தந்தையை நேரில் அரவணைத்து வாழ்த்த முடியாத காரணத்தினால், எழுத்துக்கள் ஊடாக தனது அன்பை வெளிப்படுத்துவதாகவும், தனக்குப் பதிலாகத் தனது பிள்ளைகள் இன்று தாத்தாவிற்கு அருகில் இருந்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தலைமைத்துவம் என்பது பதவியை வகிப்பது மாத்திரமன்றி, பொறுப்புகளை ஏற்று, சவால்களை எதிர்கொண்டு தளராது நிற்பதும், நம்பிக்கைக்குரிய விடயங்களுக்காகக் குரல் கொடுப்பதுமாகும் என்பதைத் தனது தந்தையின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக மஹிந்த ராஜபக்ச ஆற்றிய அர்ப்பணிப்புகளையும் தியாகங்களையும் ஒரு மகனாகத் தான் நன்கு அறிந்துள்ளதாகவும் தனது வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!