மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர சேவை முடக்கம் – அபராதமின்றி புதுப்பிக்க விசேட சலுகை!

#SriLanka #LANKA4 #vehicle #licences #Western Province
Abi
13 hours ago
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர சேவை முடக்கம் – அபராதமின்றி புதுப்பிக்க விசேட சலுகை!

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் கணினிக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர மேம்படுத்தல் காரணமாக, குறித்த சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

GovTech Sri Lanka' நிறுவனத்தினால் eRL 1.0 கணினிக் கட்டமைப்பானது 'Lanka Government Cloud 2' இலிருந்து 'Lanka Government Cloud 2+' சேவைக்கு மேம்படுத்தப்படவுள்ளது.

இதன் காரணமாக, (19) முதல் நவம்பர் 23ஆம் திகதி வரை மேல் மாகாணத்திற்குள் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன.

அத்துடன், motortraffic.wp.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இணையவழிச் சேவைகளும் இன்று நள்ளிரவு (19) முதல் நவம்பர் 23ஆம் திகதி நள்ளிரவு வரை இடைநிறுத்தப்படவுள்ளன.

அபராதம் இன்றி புதுப்பிக்க விசேட சலுகை! இந்தச் சேவை இடைநிறுத்தத்தினால் பாதிக்கப்படும் வகையில் வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க வேண்டியுள்ள அனைத்து வாகனங்களுக்கும் எவ்வித அபராதக் கட்டணமும் இன்றி நவம்பர் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள விசேட சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, வாகன உரிமையாளர்கள் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளைக் கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!