நாமல் ராஜபக்ஷ மீதான எயார்பஸ் மோசடி வழக்கு நிறைவு – நீதிமன்றம் உத்தரவு!

#SriLanka #CourtOrder #Namal Rajapaksha #LANKA4 #Case #Airbus
Abi
9 hours ago
நாமல் ராஜபக்ஷ மீதான எயார்பஸ் மோசடி வழக்கு நிறைவு – நீதிமன்றம் உத்தரவு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் பணச்சலவை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையை நிறைவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (18) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை நிறைவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.

இதன்போது, வழக்கின் முதல் சந்தேகநபரான கபில சந்திரசேன உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரு சந்தேகநபர்களுக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதவான், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையை நிறைவு செய்ய உத்தரவிட்டார். இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ஷ, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!