உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்களில் ஐந்து பேர் பலி

#Death #Attack #Russia #Ukraine #War #LANKA4 #L4
Prasu
42 minutes ago
உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்களில் ஐந்து பேர் பலி

ரஷ்யாவின் கெர்ச் பாலம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு, உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு நகரமான ஒடெசாவில், ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். 

இந்த "கொடுமையான மற்றும் திட்டமிட்ட" தாக்குதல், முதலுதவிப் பணியாளர்களையும் குறிவைத்தது என்று அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

ஒடெசா பிராந்தியத்தின் இராணுவ நிர்வாகத் தலைவர் ஒலெக் கிப்பர், மூன்று ரஷ்யத் தாக்குதல்கள் நகரின் "வரலாற்று மையத்தைத்" தாக்கியதாகக் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களில் ஒன்று யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட பகுதியைத் தாக்கியதாகவும், இதனால் ஒரு கார் தீப்பிடித்ததோடு, குறைந்தது ஏழு கட்டிடங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஜன்னல்கள் உடைந்து சிதறியதாகவும் ஒடெசா நகர சபை தெரிவித்தது.

தென்கிழக்கு ஜபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள குஷுஹும் நகரில், ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டதாகவும், ஒரு ஆண் காயமடைந்ததாகவும் உள்ளூர் இராணுவ நிர்வாக அதிகாரி மைக்கலோ செமிகின் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!