மட்டக்களப்பில் சுற்றுச்சூழல் பாதிப்பு – பாராளுமன்றத்தில் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் காரணமாகப் பல பகுதிகளில் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய உறுப்பினர், கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் நடைமுறையின் சட்டபூர்வத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அரசாங்கத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்பட ஆதாரங்களையும் சபையில் சமர்ப்பித்த அவர், தன்னுடன் கடந்த காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஆட்சியில் இருக்கின்ற போதிலும், தான் தனியாகப் போராட வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
இதேவேளை, சாபி நகர் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.