யேமனில் சவூதி கூட்டணிப் படைகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலி!
#Death
#world_news
#Attack
#LANKA4
#saudi
#Yemen
#Killed
Mithra
17 hours ago
யேமன் மீது சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் கடந்த 24 மணிநேரத்தில் நடத்திய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்துள்ளதாக ஹூதி கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
செங்கடல் கரையோரத் துறைமுக நகரமான ஹொதைதா உள்ளிட்ட பல பகுதிகளை இலக்குவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதல்களை விசேட நடவடிக்கை எனக் கூட்டணிப் படைகள் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.