முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 34 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு! – அமைச்சர்
#SriLanka
#Parliament
#Minister
#LANKA4
#Former President
#Ananda Wijepala
Abi
11 hours ago
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 34 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, 'Clean Sri Lanka' திட்டத்திற்காக 6,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது ஜனாதிபதியின் செலவின ஒதுக்கீடுகளின் கீழ் அதிகூடிய தொகையாகும்.
கடந்த காலங்களைப் போன்று குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்காக ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.