வவுனியா நகரப் பகுதியில் ஏ9 வீதியை நான்கு வழிச்சாலையாக அபிவிருத்தி செய்யத் திட்டம்!
#SriLanka
#Vavuniya
#kandy
#Road
#LANKA4
#Highway
#Devolopment
Mithra
16 hours ago
கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியின் வவுனியா நகரப் பகுதியில் 176+000 முதல் 179+000 கிலோமீற்றர் வரையான 3 கிலோமீற்றர் வீதிப் பகுதி நான்கு வழிச்சாலையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதற்காக 1,318.3 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அபிவிருத்திப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.