தாழங்குடா கடற்கரை வீதியின் 500 மீற்றர் பகுதியைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு!

#SriLanka #Project #LANKA4 #beach #PradeshiyaSabha
Abi
16 hours ago
தாழங்குடா கடற்கரை வீதியின் 500 மீற்றர் பகுதியைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் இடைநடுவே கைவிடப்பட்டிருந்த கடற்கரை வீதியின் 500 மீற்றர் பகுதியைக் கொங்கிரீட் வீதியாகப் புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர் மோசேஸ் கலிஸ்டனின் தொடர்ச்சியான முயற்சியின் பயனாக, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவும், அவர் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் தொடர்ந்து விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும் இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் பட்சத்தில், தாழங்குடா கடற்கரை வீதி முழுமையாகக் கொங்கிரீட் வீதியாக மாற்றமடையும்.

இதன் மூலம் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், எதிர்காலத்தில் தாழங்குடா கடற்கரையை மையமாகக் கொண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கும் இந்த வீதி உறுதுணையாக அமையும் எனப் பிரதேச மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த வீதிப் புனரமைப்புக்கான நிதியைப் பெற்றுக்கொடுக்கத் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்ட பிரதேச சபை உறுப்பினர் மோசேஸ் கலிஸ்டன், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் அமைச்சர் விமல் ரத்நாயக்க ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!