பன்னிப்பிட்டிய பழைய இரும்பு கொள்வனவு நிலையத்தில் தீ விபத்து!
#SriLanka
#Police
#Investigation
#LANKA4
#fire
#municipal council
Mithra
15 hours ago
மஹரகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டிய, தெபானம, பொல்வத்த சந்தி, பொரளை வீதியில் அமைந்துள்ள பழைய இரும்பு கொள்வனவு நிலையத்தில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காலை 9.05 மணியளவில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமான மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீ விபத்தில் விற்பனை நிலையத்திற்கும் அங்கிருந்த பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மஹரகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.