மாவீரர் நினைவு நாள் – கிளிநொச்சி முரசுமோட்டையில் உணர்வுபூர்வ நினைவேந்தல்!

#SriLanka #Kilinochchi #emotion #LANKA4 #Parents
Mithra
13 hours ago
மாவீரர் நினைவு நாள் – கிளிநொச்சி முரசுமோட்டையில் உணர்வுபூர்வ நினைவேந்தல்!

மாவீரர் நினைவு வாரத்தின் முதலாவது நாளான இன்று (21), கிளிநொச்சி முரசுமோட்டை வட்டார மாவீரர் நினைவேந்தல் நிகழ்வும், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

முரசுமோட்டை இரண்டாம் கட்டை ஊற்று விநாயகர் ஆலயத்திற்கு அருகில் நடைபெற்ற இந்நிகழ்வில், உறவினர்கள் கண்ணீர் மல்க சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது மாவீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!