இந்தியப் பெருங்கடல் விளிம்புச் சங்கத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க விஜித ஹேரத் இன்று இந்தியா பயணம்!

#India #SriLanka #Meeting #Travel #Association #Vijitha Herath
Mahathi
5 hours ago
இந்தியப் பெருங்கடல் விளிம்புச் சங்கத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க விஜித ஹேரத் இன்று இந்தியா பயணம்!

இந்தியப் பெருங்கடல் விளிம்புச் சங்கத்தின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (26) இந்தியாவின் புதுடில்லிக்குப் பயணமாகவுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் விளிம்புச் சங்கத்தின் 25ஆவது அமைச்சர்கள் குழுக் கூட்டம் நாளை (27) புதுடில்லியில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை சார்பில் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் விளிம்புச் சங்கத்தின் 'ட்ரொய்க்கா' உறுப்பினராகவும், 2023 முதல் 2025ஆம் ஆண்டு வரை அச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பை வகித்த நாடாகவும் இலங்கை செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் நிலைபேண்தகு அபிவிருத்தியை ஊக்குவித்தல் போன்ற விடயங்களில் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்மாநாட்டில் பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், தற்போதைய கூட்டுறவு நடவடிக்கைகளை மீளாய்வு செய்தல் மற்றும் புதிய ஒத்துழைப்புத் துறைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

இதற்கிடையில், அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்கு முன்னோடியாக, இந்தியப் பெருங்கடல் விளிம்புச் சங்கத்தின் 29ஆவது சிரேஷ்ட அதிகாரிகள் குழுக் கூட்டம் நவம்பர் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் புதுடில்லியில் நடைபெறுகின்றது.

இந்த மாநாட்டில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த 23 உறுப்பு நாடுகள் மற்றும் 12 உரையாடல் பங்காளி நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!